search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாட்ரிக் வீழ்த்திய மகிழ்ச்சியில் மலிங்கா
    X
    ஹாட்ரிக் வீழ்த்திய மகிழ்ச்சியில் மலிங்கா

    மலிங்கா வேகத்தில் சிக்கியது நியூசிலாந்து - டி 20 தொடரில் ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை

    4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்திய மலிங்கா வேகத்தில் நியூசிலாந்து 88 ரன்னில் சுருண்டதை தொடர்ந்து, இலங்கை 37 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
    கொழும்பு:

    நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-1 என சமனில் முடிந்தது.

    இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. பல்லேகலேவில் நடந்த இரு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

    இந்நிலையில், இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    தனுஷ்கா குணதிலகா 30 ரன்னும், நிரோஷன் டிக்வெலா 24 ரன்னும், லஹிரு மதுஷன்கா 20 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது.
     
    நியூசிலாந்து அணி சார்பில் சாண்ட்னர், டாட் ஆஸ்லி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

    இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை மலிங்கா வீசினார். அந்த ஓவரின் 4 பந்துகளிலும் 4 விக்கெட்டை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார் மலிங்கா. ஐந்தாவது ஓவரிலும் ஒரு விக்கெட் எடுத்தார் மலிங்கா.

    நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி அதிகமாக 26 ரன்கள் எடுத்தார். இறுதியில், நியூசிலாந்து அணி 88 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 
    இதையடுத்து, இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    இலங்கை அணி சார்பில் லசித் மலிங்கா 5 விக்கெட்டும், அகிலா தனஞ்செயா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி ஏற்கனவே டி 20 தொடரை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.  
    Next Story
    ×