search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷித் கான்
    X
    ரஷித் கான்

    வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் 342 ரன்கள் குவிப்பு

    வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்தது.
    வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் ரஹ்மத் ஷா சதம் அடித்தார். அவர் 102 ரன் எடுத்து அவுட் ஆனார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணிக்காக முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இவரது சதத்தால் நேற்றைய முதல் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்து இருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது.

    சிறப்பாக விளையாடிய அஸ்கர் ஆப்கன் 92 ரன்னிலும், அப்சர் சேசாய் 41 ரன்னிலும் அவுட் ஆனார்கள். கேப்டன் ரஷித் கான் அதிரடியாக விளையாடி 61 பந்தில் 51 ரன்கள் அடிக்க ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. வங்காளதேச அணி சார்பில் தைஜூல் இஸ்லாம் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் வங்காளதேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆப்கானிஸ்தானின் நேர்த்தியான பந்து வீச்சால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் வெளியேறினர். இதனால் 104 ரன்னுக்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.
    Next Story
    ×