search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் தெண்டுல்கர், ஸ்மித்
    X
    சச்சின் தெண்டுல்கர், ஸ்மித்

    மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து ஸ்மித் தனிப்பட்டவர்: சச்சின் தெண்டுல்கர் புகழாரம்

    ஆஷஸ் தொடரில் 3-வது சதம் விளாசிய ஸ்மித்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
    கிரிக்கெட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுபவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். தென்ஆப்பிரிக்கா தொடரின்போது கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்டில் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. ஸ்மித் கேப்டனாக இருந்ததால், குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி ஸ்மித், வார்னர், பான் கிராப்ட் ஆகியோருக்கு தடைவிதித்தது. ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்டது.

    தடைக்காலம் முடிந்து ஸ்மித் ஆஷஸ் தொடரில் அறிமுகமானார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தார். தற்போது நடைபெற்று வரும் ஓல்டு டிராபோர்டு டெஸ்டில் சதம் அடித்துள்ளார்.

    ஆஷஸ் தொடரில் நான்கு இன்னிங்சில் மூன்று சதம், ஒரு அரைசதத்துடன் 500 ரன்களை தாண்டியுள்ளார்.  ஓராண்டு தடைக்குப்பின் மீண்டும் திரும்பிய முதல் தொடரிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இன்றைய சதம் அவரின் 26-வது சதமாகும். மேலும் விரைவாக 26 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடித்தார்.

    சச்சின் தெண்டுல்கர்

    இந்நிலையில் ஸ்மித்தை சச்சின் தெண்டுல்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். ஸ்மித் ஆட்டத்தை வெகுவாக பராட்டி சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘புரிந்துகொள்ள முடியாத டெக்னிக். ஒழுங்கமைக்கப்பட்ட மனநிலை மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது. நம்பமுடியாத வகையிலான comeback!’’ என்று பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×