search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷித் கான்
    X
    ரஷித் கான்

    ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்: ரஷித் கான்

    வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பணியாற்ற உற்சாகமாக இருக்கிறேன் என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2017-ல் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. 2018-ல் இந்தியாவுக்கு ஏதிராக வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. 2-வது டெஸ்ட் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்து விளையாடியது.

    இந்நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக நாளை 3-வது டெஸ்டில் களம் இறங்குகிறது. உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் படுதோல்வியடைந்ததால் ரஷித் கான் மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவரது தலைமையில் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் களம் இறங்குகிறது. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன் என்று ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அணியின் கேப்டனாக பணியாற்றுவது எனக்கு புதியவை. முடிந்த அளவிற்கு என்னுடைய சிறந்த திறனை வெளிப்படுத்தி மகிழ்ச்சியாக ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

    வங்காள தேச அணிக்கு நாங்கள் மிகவும் மரியாதை கொடுக்கிறோம். எங்களை விட அவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். ஆனால், வங்காளதேசத்தை கண்டு நாங்கள் பயப்படவில்லை’’ என்றார்.
    Next Story
    ×