search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ் ராம், சமந்தா ஸ்டோசர்
    X
    ராஜீவ் ராம், சமந்தா ஸ்டோசர்

    அமெரிக்க ஓபன்: ராஜீவ் ராம்- சமந்தா ஸ்டோசர் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வம்சாவளி வீரர் ராஜீவ் ராம், சமந்தா ஸ்டோசர் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வீரர் ராஜீவ் ராம், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் ஜோடி, பிரான்ஸ் நாட்டின் கிர்ஸ்டன் பிளிப்கன்ஸ்- எட்வர்டு ரோஜர் வாசலின் ஜோடியை எதிர்கொண்டது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் ராஜீவ் ராம்-சமந்தா ஜோடி 7-6 (7-2), 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இந்த ஜோடி, 6ம் தரநிலை ஜோடியான டெமி ஷூர்ஸ்-ஹென்றி கான்டினன் ஜோடியை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×