search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜேசன் ஹோல்டர்
    X
    ஜேசன் ஹோல்டர்

    டாப் ஆர்டர் வரிசையில் களமிறங்க ஆசைதான்: ஆனால் பந்து வீச்சு தடுக்கிறது என்கிறார் ஹோல்டர்

    வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், தன்னால் அதிக ஓவர்கள் வீசிய பின் டாப் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வது கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வியடைந்தது. முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலான பேட்டிங்குதான் தோல்விக்கு முக்கிய காரணம் என அந்த அணியின் கேப்டனான ஜேசன் ஹோல்டர் தெரிவித்திருந்தார்.

    தற்போது பேட்டிங்கில் டாப் ஆர்டர் வரிசையில் களம் இறங்க ஆசைதான். ஆனால் 20 முதல் 30 ஓவர் வரை வீச வேண்டியிருப்பதால் கடினமாக உள்ளது என்று ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘பந்து வீச்சுடன் டாப் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்யவும் விரும்புகிறேன். இது அணியின் காம்பினேசனை பொறுத்து அமையும். நான் ஏராளமான ஓவர்கள் வீச கேட்டுக்கொள்ளப்படுகிறேன். என்னுடைய முதன்மையான பணி பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்துவதுதான். நான் பந்து வீச்சில் அதிக அளவில் சாதித்துள்ளேன். 20 முதல் 30 ஓவர்கள் பந்து வீசிய பின், டாப் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வது கடினமான உள்ளது.

    ராஸ்டன் சேஸ் போன்ற பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி என்னுடைய பணிச்சுமையை குறைத்துக் கொண்டால், என்னுடைய பேட்டிங்கில் மேலும் சற்று கவனம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும்’’ என்றார்.
    Next Story
    ×