search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிமோனா ஹாலெப் தோற்கடித்த அமெரிக்க வீராங்கனை
    X
    சிமோனா ஹாலெப் தோற்கடித்த அமெரிக்க வீராங்கனை

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஹாலெப் அதிர்ச்சி தோல்வி- நடால் 3-வது சுற்றுக்கு தகுதி

    அமெரிக்க ஓபன் டென்னிஸில் முன்னணி வீராங்கனையான ஹாலெப் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகத்தர வரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும், விம்பிள்டன் சாம்பியனுமான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் டவ்ன் சென்டை எதிர் கொண்டார்.

    இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹாலெப் 116-வது வரிசையில் இருக்கும் வீராங்கனையிடம் தோற்றார். டெய்லர் டவுன் சென்ட் 2-6, 6-3, 6-4 என்ற கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல் 6-வது வரிசையில் இருக்கும் பெட்ரா கிவிட்டோவா (செக்குடியரசு) 4-6, 4-6 என்ற கணக்கில் பெட்கோவிக்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    உலக தர வரிசையில் முதல் இடத்தில் இருப்பவரும், நடப்பு சாம்பியனுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 2-வது சுற்றில் போலந்தை சேர்ந்த லைன்ட்டியை சந்தித்தார். இதில் ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் ஹோஸ்னியாக்கி (டென் மார்க்), கெளின் (அமெ ரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    சிமோனா ஹாலெப்

    3 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரும், தர வரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோச்சி நகிசை சந்திக்க இருந்தார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் விலகினார். இதனால் நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவர் 3-வது சுற்றுக்கு முன் னேறினார்.

    6-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் கவரேவ் (ஜெர்மனி), 6-3, 3-6, 6-2, 2-6, 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த பிரான்சென்சை கடும் போராட்டத்துக்கு பின் வீழ்த்தி முன்னேறினார்.
    Next Story
    ×