search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெடரர், ஜோகோவிச், செரீனா
    X
    பெடரர், ஜோகோவிச், செரீனா

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஜோகோவிச், பெடரர், செரீனா வெற்றி

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜோகோவிச், பெடரர், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது.

    நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) முதல் சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த ராபர்ட்டோ கார்பெலிசை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-4, 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 23-வது வரிசையில் இருக்கும் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) தகுதி சுற்று வீரரான ஜானிக் சீன்னரை (இத்தாலி) 6-3, 7-6 (7-4), 4-6, 6-3 என்ற கணக்கில் வென்றார்.

    உலகின் 3-ம் நிலை வீரரும், 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)- இந்திய வீரர் சுமித் நாசலை எதிர்கொண்டார்.

    தகுதி சுற்றில் வென்று முதன்மை சுற்றுக்கு முன்னேறிய சுமித் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று பெடரருக்கும் யாருமே எதிர்பாராத வகையில் அதிர்ச்சி கொடுத்தார்.

    ஆனால் அதற்கு அடுத்த செட்களில் பெடரர் பிரமாதமாக விளையாடி சுமித் நாசலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 4-6, 6-1, 6-2, 6-4.

    மற்ற ஆட்டங்களில் 5-வது வரிசையில் இருக்கும் மெட்சதேவ் (ரஷியா) 7-வது வரிசையில் இருக்கும் நிஷிகோரி ஆகியோரும் வென்றனர். சென்னையை சேர்ந்த குன்னேஸ்வரன் முதல் சுற்றிலேயே மெட்வதேவிடம் தோற்று வெளியேறினார்.

    23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருப்பவருமான செரீனா வில்லயம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான மரியா ‌ஷரபோவாவை (ரஷியா) எதிர்கொண்டார்.

    இதில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    2-வது இடத்தில் இருப்பவரான ஆஸ்லே பேர்டி (ஆஸ்திரேலியா) முதல் சுற்றில் 1-6, 6-3, 6-2 என்ற கணக்கில் ஜரினா டியாசை (கஜகஸ்தான்) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 3-ம் நிலை வீராங்கனையான பிளிஸ்கோவா (செக் குடியரசு), வீனஸ் வில்லியம்ஸ், மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா), 5-வது வரிசையில் உள்ள சுவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
    Next Story
    ×