search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பும்ரா
    X
    பும்ரா

    டெஸ்ட் போட்டியில் பும்ரா புதிய சாதனை

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் குறைந்த ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.
    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 8 ஓவர் வீசி 7 ரன் கொடுத்து, 5 விக்கெட் கைப்பற்றினார்.

    இதன் மூலம் குறைந்த ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். இதற்கு முன்பு வெங்கடபதிராஜு 1990-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சண்டிகாரில் 12 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இதை பும்ரா முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

    ஹர்பஜன்சிங் 13 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது 3-வது குறைந்த ரன் நிலையாகும்.

    25 வயதான பும்ரா டெஸ்டில் (11 போட்டி) 4- வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
    Next Story
    ×