search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பும்ரா
    X
    பும்ரா

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50 விக்கெட்டுக்கள் சாய்த்து பும்ரா சாதனை

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50 விக்கெட்டுக்கள் சாய்த்த ஒரே இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பும்ரா.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 விக்கெட்டுக்கள் கைப்பற்றி, அதிவேகமாக 50 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், மூன்று வகை (டெஸ்ட், ஒருநாள், டி20) கிரிக்கெட்டிலும் 50 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    Next Story
    ×