search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதமடித்த மகிழ்ச்சியில் கிருஷ்ணப்பா கவுதம்
    X
    சதமடித்த மகிழ்ச்சியில் கிருஷ்ணப்பா கவுதம்

    20 ஓவர் கிரிக்கெட் - சதத்துடன் 8 விக்கெட்டு வீழ்த்தி கிருஷ்ணப்பா கவுதம் அசத்தல்

    கர்நாடகாவில் நடந்த கே.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பெல்லாரி டஸ்கரஸ் அணிக்காக களமிறங்கிய கிருஷ்ணப்பா கவுதம் அதிவேக சதமடித்ததுடன், 8 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    பெங்களூரு:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் பாணியில் கர்நாடகாவில் கே.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

    பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்த ஷிமோகா லயன்சுக்கு எதிரான ஆட்டத்தில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக களம் இறங்கிய கிருஷ்ணப்பா கவுதம் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்சருடன் 134 ரன்கள் விளாசினார்.

    கே.பி.எல். போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்சம் இதுவாகும். மழை காரணமாக 17 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் பெல்லாரி அணி 3 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய ஷிமோகா அணி 16.3 ஓவர்களில் 133 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.

    இதில், சதமடித்து முத்திரை பதித்த கிருஷ்ணப்பா கவுதம் தனது அபாரா சுழற்பந்து வீச்சால், 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
    Next Story
    ×