search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் டெண்டுல்கர்
    X
    சச்சின் டெண்டுல்கர்

    சச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியால், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் ஒரு சாதனையை முறியடிக்க முடியாது என கூறியுள்ளார். அது என்ன என்பதை பார்ப்போம்.
    இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி பல வீரர்களின் சாதனைகளை முறியடித்து முன்னணி வீரராகவும், சிறப்பான ஆட்டத்திறன் உடையவராகவும் செயல்பட்டு வருகிறார்.

    ஒவ்வொரு போட்டியின்போதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 2 சதம் அடித்து விராட் கோலி முத்திரை பதித்தார். 77 டெஸ்டில் 6613 ரன் குவித்துள்ள (131 இன்னிங்ஸ்) கோலி இந்த டெஸ்ட் தொடரில் பல்வேறு சாதனைகளை படைப்பார் என பல தரப்பு ரசிகர்களும் நம்புகின்றனர்.

    விராட் கோலி - வீரேந்திர சேவாக்

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் விராட் கோலி குறித்து கூறுகையில், ‘இப்போது சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான். அவர் சதம் அடிக்கும் விதம், ரன்கள் குவிக்கும் விதம் என அனைத்துமே சிறப்பானதுதான்.

    கிரிக்கெட் ஜாம்பவானான சச்சினின் பல்வேறு சாதனைகளை கோலி நிச்சயம் முறியடிப்பார். ஆனால், சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் பங்குப் பெற்றுள்ளார். இந்த ஒரு சாதனையை விராட் கோலியால் கூட முறியடிக்க முடியாது.

    எந்த ஒரு வீரரும் அதனை முறியடிப்பார் என எனக்கு தோன்றவில்லை’ என கூறியுள்ளார். விராட் கோலி 78(நடந்துக் கொண்டிருக்கும் ஒரு போட்டியுடன் சேர்த்து) டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது பயணத்தை 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×