search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாப்ரா ஆர்சர்
    X
    ஜாப்ரா ஆர்சர்

    ஆ‌ஷஸ் 3-வது டெஸ்ட்: ஆர்சரின் அசுர பந்து வீச்சில் 179 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா

    ஹெட்டிங்லேயில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 179 ரன்னில் சுருண்டது.
    இங்கிலாந்து -ஆஸ்திரேலியா மோதும் ஆ‌ஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸ் ஹெட்லிங்லேயில் தொடங்கியது. மழைக் காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஹாரிஸ், அடுத்து வந்த கவாஜா ஆகியோர் தலா 8 ரன்னில் அவுட் ஆனார்கள்.

    அதன்பின் டேவிட் வார்னர்- மார்னஸ் லாபஸ்சேக்னே ஜோடி சிறப்பாக விளையாடியது. ஸ்கோர்136 ரன்னாக இருந்தபோது வார்னர் (61) அவுட் ஆனார். அதன்பின் ஜாப்ரா ஆர்சர் அபார பந்து வீச்சில் விக்கெட்டுகள் சரிந்தன.

    லாபஸ்சேக்னே மட்டும் தாக்கு பிடித்து விளையாடினார். டிராவிஸ் ஹெட், மேத்யூ வடே, கம்மின்ஸ் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். கேப்டன் டிம் பெய்ன் 11 ரன்னிலும், பேட்டின்சன் 2 ரன்னிலும், நாதன் லயன் ஒரு ரன்னிலும் வெளியேறினர். அதிகபட்சமாக லாபஸ்சேக்னே 74 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஆஸ்திரேலியா 52.1 ஓவரில் 179 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் ஆர்சர் 6 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டும், வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    மழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
    Next Story
    ×