search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹனுமா விஹாரி கவுதம் காம்பிர்
    X
    ஹனுமா விஹாரி கவுதம் காம்பிர்

    ரகானே, ரோகித் சர்மாவுக்காக இந்த ரிஸ்க்-ஐ எடுக்கக்கூடாது: கவுதம் காம்பிர்

    ரகானே, ரோகித் சர்மா ஆகியோர் ஆடும் லெவன் அணியில் இடம்பெறுவதற்காக இந்த ரிஸ்க்-ஐ எடுக்கக்கூடாது என்று காம்பிர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியில் ரகானே, ரோகித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறி. இந்திய அணி கேப்டன் நான்கு பந்து வீச்சாளர்களுடன்தான் விளையாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் இந்தியா ஆறு பேட்ஸ்மேன்களுடன் விளையாடுவது உறுதியாகிவிட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது கேஎல் ராகுல் மோசமாக விளையாடியதால் நீக்கப்பட்டு மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறக்கப்பட்டனர்.

    தற்போதும் அப்படி களமிறங்கினால் ரகானே, ரோகித் சர்மா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பிடிப்பர். ஆனால், இவர்களுக்காக ஹனுமா விஹாரியை தொடக்க பேட்ஸ்மேனாக களமிறக்கக்கூடாது என்று காம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காம்பிர் கூறுகையில் ‘‘நானாக இருந்தால் ஹனுமா விஹாரி தொடக்க வீரராக களம் இறக்க விரும்பமாட்டேன். வெஸ்ட் இண்டீஸ் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறனை பெற்றுள்ளார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் (Dukes) பந்துகளை பயன்படுத்தும் முடிவை எடுத்தது சிறந்தது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் கூக்கபுர்ரா பந்துகளை பயன்படுத்தியது. டியூக்ஸ் கிரிக்கெட் பந்துகள் இங்கிலாந்தில் தயாரிக்கப்படுகிறது.

    கூக்கபுர்ரா பந்துகளை விட டியூக்ஸ் பந்துகளில் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெல்லும்போது ஆடுகளங்கள் பந்து வீச்சு மிகப்பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்தது. இந்தத் தொடரில் அது தொடரும் என நம்புகிறேன்.

    இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியா கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரைத்தான் தொடக்க வீரர்களாக களம் இறக்க வேண்டும். நானாக இருந்தார் ஹனுமா விஹாரியை தொடக்க வீரராக களம் இறக்கமாட்டேன்’’ என்றார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி முதல் இன்னிங்சில் 8 ரன்களும், 2-வது இன்னிங்சில் 13 ரன்களுமே அடித்தார். ஆனால், மயாங்க் அகர்வால் உடன் இணைந்து முதல் இன்னிங்சில் 18 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×