search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிவி சிந்து
    X
    பிவி சிந்து

    உலக பேட்மிண்டன் போட்டி - 2வது சுற்றில் சிந்து வெற்றி

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
    பாசெல்:

    25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பாய் பூ போவை (சீனதைபே) நேற்று சந்தித்தார். 43 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பி.வி.சிந்து அடுத்து பீவென் ஜாங்கை (அமெரிக்கா) எதிர்கொள்கிறார்.

    முன்னதாக, ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஜப்பானின் அகானே யமாகுச்சி 14-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனை யோ ஜியா மின்னிடம் வீழ்ந்தார்.


    Next Story
    ×