search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட் சாதனை
    X
    டி20 கிரிக்கெட் சாதனை

    டி20 கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங்கின் 14 வருட கால சாதனையை முறியடித்தார் கனடா வீரர்

    டி20 அறிமுக போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார் கனடா வீரர்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங். டி20 அறிமுக போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 2005-ல் 98 ரன்கள் குவித்தார். இதுதான் 14 வருட கால சாதனையாக இருந்தது.

    இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான தகுதி தொடரில் கனடா அணி கெய்மன் தீவு அணியை எதிர்கொண்டது. இதில் கனடா அணியைச் சேர்ந்த 48 பந்தில்  ஆறு பவுண்டரிகள், 10 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார்.

    இதன்மூலம் அறிமுக போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை 14 வருடத்திற்குப் பிறகு முறியடித்துள்ளார். டேவிட் வார்னர் 89 ரன்களும், கனடாவைச் சேர்ந் ஹிரால் பட்டேல் 88 ரன்களும், குவைத்தைச் சேர்ந்த அட்னான் இட்ரீஸ் 79 ரன்களும் அடித்துள்ளனர்.
    Next Story
    ×