search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாப்ரா ஆர்சர் ஸ்டீவ் வாக்
    X
    ஜாப்ரா ஆர்சர் ஸ்டீவ் வாக்

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சொத்து ஜாப்ரா ஆர்சர்: ஸ்டீவ் வாக் சொல்கிறார்

    பவுன்சர் பந்துகளால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்டிய ஜாப்ரா ஆர்சர், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சொத்து என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் பார்படோஸில் பிறந்தவர் ஜாப்ரா ஆர்சர். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் இங்கிலாந்தில் குடியேறினார். இங்கிலாந்து உரிமை பெற்றாலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க சிக்கல் நீடித்தது.

    இவரை அணியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வெளிநாட்டில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிவர்கள் அணியில் இடம் பிடிப்பதற்கான விதிமுறையை மாற்றியமைத்தது.

    இதனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்தார். அதன்பின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் அறிமுகம் ஆனார்.

    முதல் டெஸ்ட் போட்டியில் பவுன்சர் பந்தால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். ஸ்மித் கழுத்தை இவது பவுன்சர் தாக்க, 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் ஸ்மித் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் ஆர்சர் இங்கிலாந்து கிரிக்கெட்டின் சொத்து என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், ஆஷஸ் தொடருக்கான அந்த அணியின் ஆலோசகருமான ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

    ஆர்சர் குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘லார்ட்ஸ் டெஸ்டில் 40 ஓவர்கள் வீசியுள்ளார். ஒவ்வொரு பந்தையும் முந்தைய பந்தைவிட வேகமாக வீசுகிறார். அறிமுக போட்டியில் எல்லோரையும் ஈர்க்கக்கூடிய வகையில் பந்து வீசினார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் ஒரு நீண்ட போட்டி. நீங்கள் எப்படி தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். எப்படி சூழ்நிலையை கையாள வேண்டும் என்பது முக்கியமானது. ஆனால், இங்கிலாந்து பார்வையில் இதுவரை சிறப்பாகவே நடந்துள்ளது.

    ஆர்சரை போன்று யாரும் பந்து வீசவில்லை என்று என்னால் சொல்ல முடியாது. அவருடைய பந்து வீச்சு ஆக்சன் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ராத் போன்றே உள்ளது. அதில் மிகப்பெரிய அளவில் என்னால் தவறை பார்க்க முடியவில்லை. அவர் தன்னை மிகவும் சிறப்பாக கட்டுப்படுத்திக் கொள்கிறார்.

    அவருடைய பந்து வீச்சு, பவுன்சர் போன்ற விஷயங்களில் எங்கள் அணி, அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆராயும்.

    இவரைப் போன்ற பந்து வீச்சாளர்கள் மூலம் எதிரணியை அச்சுறுத்த முடியும். பிளாட் ஆடுகளத்தில் கூட ஆதிக்கம் செலுத்தி விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியும். இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சொத்து’’ என்றார்.
    Next Story
    ×