search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வினய் குமார்
    X
    வினய் குமார்

    கர்நாடக வீரர் வினய் குமார் புதுச்சேரி கிரிக்கெட் அணிக்காக விளையாடுகிறார்

    கர்நாடக கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான வினய் குமார் பாண்டிச்சேரி அணிக்காக விளையாட இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார். 35 வயதான இவர் இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ளார். கர்நாடக ரஞ்சி அணிக்காக விளையாடி வரும் இவர், அந்த அணியின் கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பாண்டிச்சேரி அணிக்கு மாறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஆல்வின் காளிச்சரம் ஆலோசகராக நியமிக்கப்பட இருக்கிறார். கர்நாடக அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜே அருண் குமார் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

    வினய் குமார் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2013-14, 2014-15 ரஞ்சி டிராபியில் கர்நாடக அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.
    Next Story
    ×