search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகிலா தனஞ்ஜெயா கேன் வில்லியம்சன்
    X
    அகிலா தனஞ்ஜெயா கேன் வில்லியம்சன்

    ‘பார்ட் டைம்’ பவுலரான கேன் வில்லியம்சனுக்கு வந்த சோதனை: சந்தேகம் இருப்பதாக புகார்

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்த போட்டியில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது நியூசிலாந்து கேப்டனான கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்று ஓவர்கள் வீசினார். அவர் நீண்ட நேரம் எதிரணியின் விக்கெட் விழவில்லை என்றால், பகுதி நேரமாக ஒன்றிரண்டு ஓவர்கள் வீசுவார். அப்படித்தான் மூன்று ஓவர்கள் வீசினார். அப்போது ஐசிசி விதிமுறைக்கு முரண்பட்டு பந்து வீசியதாக புகார் கூறப்பட்டது.

    போட்டி அதிகாரிகள் இதுகுறித்து நியூசிலாந்து அணி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினார். இன்னும் 14 நாட்களுக்குள் கேன் வில்லியம்சன் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்பட்டு சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தடைக்குள்ளாவார் என்று ஐசிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கான முடிவு வரும் வரை அவர் தொடர்ந்து பந்து வீசலாம்.

    அதேபோல் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயாவும் முரண்பாடாக பந்து வீசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஆறு விக்கெட் வீழ்த்தினார். முன்னணி பந்து வீச்சாளர் என்பதால் இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
    Next Story
    ×