search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிம் சவுத்தி
    X
    டிம் சவுத்தி

    இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி கேப்டனாக சவுத்தி நியமனம்

    இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக சவுத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
    இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 22-ந்தேதி (நாளைமறுநாள்) தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வேகப்பந்து வீச்சாளர் சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.14 பேர் கொண்ட நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டிம் சவுத்தி, 2. டாட் ஆஸ்ட்லே, 3. டாம் ப்ரூஸ், 4. கிராண்ட்ஹோம், 5. பெர்குசன், 6. மார்ட்டின் கப்தில், 7. ஸ்காட், 8. டேரில் மிட்செல், 9. கொலின் முன்ரோ, 10. சேத் ரேன்ஸ், 11. மிட்செல் சான்ட்னெர், 12. டிம் செய்பெர்ட், 13. இஷ் சோதி, 14. ராஸ் டெய்லர்.

    டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 3-ந்தேதியும், 3-வது போட்டி 5-ந்தேதியும் நடக்கிறது.
    Next Story
    ×