search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியினர்
    X
    இந்திய அணியினர்

    இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் டிரா

    ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்களுக்கிடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
    ஆன்டிகுவா:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆன்டிகுவாவில் நடந்தது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா சதம் அடித்தார். இஷாந்த்சர்மா, உமேஷ்யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது.

    116 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்து இருந்தது. நேற்று 3-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து விளையாடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு 305 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    விகாரி 64 ரன்னும், கேப்டன் ரகானே 54 ரன்னும் எடுத்தனர். பிரேசர் 2 விக்கெட்டும், ஷெப்பர்டு, பியாரே தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    305 ரன் இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன் எடுத்து இருந்தது. இதனால் 3 நாள் பயிற்சி ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.

    பும்ரா, அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×