என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் - அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் ‘சாம்பியன்’
Byமாலை மலர்19 Aug 2019 8:53 PM GMT (Updated: 19 Aug 2019 8:53 PM GMT)
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மாசன்:
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் மெட்விதேவ், டேவிட் கோபினை (பெல்ஜியம்) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மெட்விதேவ் 7-6 (7-3), 6-4 என்ற நேர்செட்டில் டேவிட் கோபினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த பட்டத்தை மெட்விதேவ் வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியின் மூலம் மெட்விதேவ் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறினார். இது அவருடைய சிறந்த தரநிலையாகும். 2010-ம் ஆண்டுக்கு பிறகு ‘டாப்-5’ தரவரிசையில் இடம் பிடித்த முதல் ரஷிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட டேவிட் கோபின் 4 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 15-வது இடத்தை பிடித்துள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், 34 வயதான ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை (ரஷியா) எதிர்கொண்டார். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 7-5, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் குஸ்னெட்சோவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் மேடிசன் கீஸ் தரவரிசையில் 8 இடங்கள் ஏற்றம் கண்டு மீண்டும் டாப்-10 வரிசைக்குள் இடம் பிடித்தார். தோல்வி அடைந்த குஸ்னெட்சோவா 153-வது இடத்தில் இருந்து 62-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

Next Story
×