search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவி சாஸ்திரி
    X
    ரவி சாஸ்திரி

    என்னை மீண்டும் தேர்வு செய்ததற்கு நன்றி - ரவி சாஸ்திரி

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தன்னை மீண்டும் தேர்ந்தெடுத்த தேர்வுக் குழுவுக்கு ரவி சாஸ்திரி நன்றி தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடரோடு  முடிவடைந்தது. இதை தொடர்ந்து புதிதாக தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான வேலையில் பிசிசிஐ களம் இறங்கியது.

    இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழு ஆய்வு செய்தது. இதையடுத்து ரவி சாஸ்திரி, மைக் ஹெஸ்சன், டாம் மூடி உள்பட 6 பேரிடம் இறுதி நேர்காணல் நடத்தியது. பின்னர் ரவிசாஸ்திரியை மீண்டும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளோம் என்று கபில்தேவ் தெரிவித்தார்.

    இந்நிலையில், மேற்கிந்திய தொடரில் பங்கேற்றுள்ள தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:

    என் மீது நம்பிக்கை வைத்து என்னை மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக்கிய தேர்வுக் குழுவுக்கு நன்றி. இந்திய அணியின் ஓர் அங்கமாக இருப்பது மிகவும் மதிப்பும், மரியாதையுமானது. இந்திய அணி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. 

    ராவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி

    யாரும் சரியானவர்கள் அல்ல. அனைவரும் சில தவறுகளை செய்கிறோம். ஆனால் நீங்கள் செய்யும் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது அணிக்கு இளம் வீரர்கள் அதிகம் வந்தவண்ணம் உள்ளனர். இது மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரவி சாஸ்திரி 2021-ம் ஆண்டு நடைபெறம் டி20 உலக்கோப்பை வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×