search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலீம் டார் ஸ்டீவ் பக்னர்
    X
    அலீம் டார் ஸ்டீவ் பக்னர்

    ஸ்டீவ் பக்னரின் சாதனையை சமன் செய்தார் பாகிஸ்தான் நடுவர்

    பாகிஸ்தானைச் சேர்ந்த அலீன் டார் 128 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி ஸ்டீவ் பக்னரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
    பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் டார் கிரிக்கெட் போட்டிக்கான நடுவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2003-ல் தனது நடுவர் பணியைத் தொடங்கிய டார், இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடுவராக பணியாற்றுகிறார்.

    இது அவருக்கு 128 டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் 128 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி சாதனைப் படைத்த ஸ்டீவ் பக்னரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக அலீம் டார் 376 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இருவரையும் தவிர்த்து தென்ஆப்பிரிக்காவின் ருடி கோயர்ட்சன் 108 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இந்த மூன்று பேர் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேலான போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளனர்.
    Next Story
    ×