search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிராத்வைட்
    X
    பிராத்வைட்

    பேட்டிங் ஸ்டைலை மாற்றுவது குறித்து யோசிக்கிறேன்: பிராத்வைட்

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான பிராத்வைட் பேட்டிங் ஸ்டைலை மாற்றுவது குறித்து யோசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பிராத்வைட். வேகப்பந்து வீச்சு அதிரடி ஆல்ரவுண்டரான அவர் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 82 பந்தில் 101 ரன்கள் விளாசினார்.

    ஆனால் சீராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கிடையாது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடரில் பிராத்வைட் 9, 10 மற்றும் 0 என சொற்ப ரன்களிலேயே ஆட்டம் மிழந்தார்.

    இதனால் அவர் மீது விமர்சனம் எழும்பி வருகிறது. இதனால் பந்து சிக்சருக்கு அனுப்பும் ஷாட், ஸ்விப் ஷாட் மற்றும் முறையான முறையில் பேட்டிங் செய்யும் வகையில் பேட்டிங்கை முறையை மாற்ற யோசித்து வருகிறார்.

    இதுகுறித்து பிராத்வைட் கூறுகையில் ‘‘பேட்டிங்கை பொறுத்த வரையில் என்னுடைய யோசனையை மாற்றுவதற்கான வேலையில் இறங்கியுள்ளேன். நான் போதுமான வகையில் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேட்டிங் குறித்து ஆலோசித்து வருகிறேன்.

    தற்போது எனது நினைப்பில் இருக்கும் ஒரு சிந்தனை எனது பிட்னஸ் குறித்துதான். கடந்த 12 முதல் 14 மாதங்களாக கடினமாக உடற்பயிற்சி செய்து வருகிறேன். என்னால் மிகவும் ஸ்டிராங்கான வீரராக முடியும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×