என் மலர்

  செய்திகள்

  செரீனா வில்லியம்ஸ்
  X
  செரீனா வில்லியம்ஸ்

  சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய செரீனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார்.
  வாஷிங்டன்:

  அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

  இந்நிலையில், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் (வயது 39) கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். 

  செரீனா வில்லியம்ஸ்

  இன்று நடைபெற உள்ள முதல் சுற்று ஆட்டத்தில் ஜரினா தியாசை எதிர்கொண்டு விளையாடவிருந்த நிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் குணமடையாததால், போட்டியில் இருந்து விலகியிருக்கிறார் செரீனா.

  இதேபோன்று ரோஜர்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் காயம் காரணமாக செரீனா விலகினார். இதனால் கனடாவின் பியான்கா ஆண்ட்ரஸ்கு போட்டியின்றி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×