என் மலர்

  செய்திகள்

  நிஷாந்த் ஜெகதீசன்
  X
  நிஷாந்த் ஜெகதீசன்

  குவாலிபையர்-2: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் குவாலிபையர் 2-ல் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ்.
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் குவாலிபையர்-2 திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

  அதன்படி அந்த அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வழக்கம்போல் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி 14.4 ஓவரில் 101 ரன்னாக இருக்கும்போது பிரிந்தது. ஜெகதீசன் 48 பந்தில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

  மதுரை பாந்தர்ஸ் வீரர் கவுசிக்

  ஹரி நிஷாந்த் 46 பந்தில் 51 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஆர். விவேக் ஒரு ரன்னில் ஏமாற்றம் அடைந்தாலும், முகமது மற்றும் சதுர்வேத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

  இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 18 மற்றும் 19-வது ஓவர்களில் தலா இரண்டு சிக்சர்கள் விளாசினர். 13 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் விளாசிய சதுர்வேத் 19-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

  கடைசி ஓவரில் முகமது ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 16 ரன்கள் விளாச திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. முகமது 9 பந்தில் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

  பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
  Next Story
  ×