search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி (பழைய படம்)
    X
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி (பழைய படம்)

    1998-ம் ஆண்டுக்குப்பின் காமன்வெல்த்தில் கிரிக்கெட் போட்டி

    பர்மிங்காமில் 2022-ல் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
    நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை  காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி 2022 காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடக்கிறது. இதில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது பரிமிங்காம் காமன்வெல்த்தில் பெண்கள் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு 1998-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருந்தது. தென்ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போது 24 வருடங்கள் கழித்து காமன்வெல்த்தில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

    2022-ல் ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்ட் 7-ந்தேதி வரை கிரிக்கெட் நடைபெறும். இதில் 8 அணிகள் தங்கப் பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்தும்.
    Next Story
    ×