என் மலர்

  செய்திகள்

  திண்டுக்கல் டிராகன்ஸ் மதுரை பாந்தர்ஸ்
  X
  திண்டுக்கல் டிராகன்ஸ் மதுரை பாந்தர்ஸ்

  இறுதிப் போட்டிக்கு நுழையும் 2-வது அணி எது?: திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை நாளை பலப்பரீட்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் 2-வது குவாலிபையர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
  டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு நெல்லையில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை தோற்கடித்தது.

  இதன்மூலம் காஞ்சி வீரன்ஸ் வெளியேற்றப்பட்டது. வெற்றி பெற்ற மதுரை 2-வது தகுதி சுற்றில் விளையாட தகுதி பெற்றது.

  இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டம் நாளை நத்தத்தில் நடக்கிறது. இதில் மதுரை பாந்தர்ஸ் அணியுடன் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. இவ்விரு அணிகள் மோதிய ‘லீக்’ ஆட்டத்தில் திண்டுக்கல் 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
  Next Story
  ×