search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
    X
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    இறுதி போட்டியிலும் வென்று கோப்பையை கைப்பற்றுவோம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி

    சென்னையில் நடக்கும் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவோம் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடரில் நேற்று நெல்லையில் நடந்த இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2016, 2017-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதில் 2017-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது.

    இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் கவுசிக் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திண்டுக்கல் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கங்கா ஸ்ரீதரின் பேட்டிங்கும், பெரியசாமியின் பந்து வீச்சும் எங்கள் அணி வெற்றி பெற பெரிதும் உதவியது. இறுதிகட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    ஆனாலும் இது த்ரில்லிங்கான வெற்றி. இதே உத்வேகத்துடன் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி பரிசு கோப்பையை வெல்வதே எங்கள் லட்சியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற கங்கா ஸ்ரீதர் கூறும்போது, “அணிக்கு நல்ல பங்களிப்பு அளித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதி கட்டத்தில் வெற்றி பெற்றது நல்ல அறிகுறியாகும். இறுதிப் போட்டிக்குள் நுழையும் மற்றொரு அணி யாராக இருந்தாலும் கவலையில்லை. நாங்கள் இறுதிப் போட்டிக்கு தயாராக இருக்கிறோம்” என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வருகிற 15-ந்தேதி சென்னையில் நடக்கும் இறுதிப் போட்டியில் 2-வது தகுதி சுற்றில் வெற்றி பெறும் (திண்டுக்கல் டிராகன்ஸ் அல்லது மதுரை பாந்தர்ஸ்) அணியுடன் மோதும்.
    Next Story
    ×