search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அதிக ரன்: 26 வருட சாதனையை முறியடித்தார் விராட் கோலி

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை 26 வருடத்திற்குப் பிறகு முறியடித்துள்ளார் விராட் கோலி.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி 19 ரன்களை எட்டும்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    இதற்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவெத் மியான்தத் 64 இன்னிங்சில் 1930 ரன்கள் அடித்திருந்தார். இன்று விராட் கோலி 34 இன்னிங்சில் 26 வருடத்திற்குப் பிறகு மியான்தத் சாதனையை முறியடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக மார்க் வாக் 1708 ரன்களும், கல்லீஸ் 1666 ரன்களும், பாகிஸ்தானின் ரமீஸ் ராஜா 1624 ரன்களும், சச்சின் தெண்டுல்கர் 1573 ரன்களும் அடித்துள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விராட் கோலி 7 சதங்களும், 10 அரைசதங்களும் விளாசியுள்ளார்.
    Next Story
    ×