search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐசிசி பிசிசிஐ
    X
    ஐசிசி பிசிசிஐ

    பிசிசிஐ-யின் வருவாயை வெகுவாக குறைக்க விரும்பும் ஐசிசி

    வரிவிதிப்பில் விலக்கு அளிக்காததால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கக்கூடிய வருவாயை வெகுவாக குறைக்க ஐசிசி விரும்புகிறது.
    உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஐசிசி நடத்தும் தொடர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மிகப்பெரிய அளவில் பங்கிட்டு கொண்டன.

    இந்தியாவின் ஷஷாங்க் மனோகர் ஐசிசி-யின் தலைவராக ஆன பின் இதற்கு வேட்டு வைத்தார். ஐசிசியின் வருமான பங்கிட்டு கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்தார். இதனால் இந்தியாவுக்கு சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

    பொதுவாக ஐசிசி தொடர் ஒரு நாட்டில் நடைபெற்றால், அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அரசின் வரிவிலக்கு வாங்கிக் கொடுக்கும். வரி விலக்கு அளிக்கப்படும்போது அரசுக்கு மிகப்பெரிய அளவில் வரி செலுத்த வேண்டியதில்லை. அது ஐசிசிக்கு கூடுதல் வருவாயாக கிடைக்கும்.

    ஆனால் 2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதற்கு வரி விலக்கு வாங்கித் தர வேண்டும் என்ற ஐசிசி கோரிக்கை விடுத்தது. பிசிசிஐ-யும் விலக்கு வாங்கிக் கொடுக்க முயற்சி செய்தது.

    ஆனால் மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டது. இதனால் டி20 கிரிக்கெட்டில் வரியாக செலுத்தியதை பிசிசிஐ-யின் ஆண்டு வருமானத்தில் பிடித்தம் செய்ய ஐசிசி விரும்புகிறது. இதனால் பிசிசிஐ-க்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த பிரச்சனைக்கு தீர்வுக்கான பிரிட்டீஷ் சட்ட நிறுவனத்தை பிசிசிஐ நாடி ஆலோசனை கேட்க இருக்கிறது.
    Next Story
    ×