search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 விக்கெட் வீழ்த்திய கொலின் அக்கர்மான்
    X
    7 விக்கெட் வீழ்த்திய கொலின் அக்கர்மான்

    டி20 கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்கா வீரர் 7 விக்கெட் வீழ்த்தி சாதனை

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விட்டாலிட்டி பிளாஸ் டி20 கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் 7 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
    இங்கிலாந்தில் கவுன்ட்டி அணிகளுக்கு இடையிலான விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஒரு ஆட்டத்தில் லெய்செஸ்டர்ஷைர் - வார்விக்‌ஷைர் அணிகள் மோதின. இதில் லெஸ்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி வரும் தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் கொலின் அக்கர்மான் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    இதற்கு முன் சோமர்செட் அணிக்காக விளையாடிய மலேசியாவைச் சேர்ந்த அருள் சுப்பையா கிளேமோர்கன் அணிக்கெதிராக 2011-ல் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
    Next Story
    ×