search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரைன் லாரா கிறிஸ் கெய்ல்
    X
    பிரைன் லாரா கிறிஸ் கெய்ல்

    வரலாற்றுப் பதிவில் லாரா என்ற இடத்தில் கிறிஸ் கெய்ல் பெயர்: இதற்கு இன்னும் 13 ரன்களே தேவை

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் அடித்தால் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பெற இருக்கிறார் கிறிஸ் கெய்ல்.
    உலக கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக கருதப்படுபவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த பிரைன் லாராவும் ஒருவர். தனது அபார பேட்டிங்கால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பல வெற்றிகளை தேடிக்கொடுத்தவர்.

    இவர் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சதங்களுடன் 11953 ரன்கள் குவித்து, டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையுடன் விளங்குகிறார்.

    ஒருநாள் கிரிக்கெட்டிலும் 299 போட்டியில் 19 சதங்களுடன் 10405 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். ஆனால் ஒருநாள் போட்டியில் கிறிஸ் கெய்ல் லாராவின் சாதனையை துரத்தினார். அவர் 298 போட்டியில் 25 சதங்களுடன் 10393 ரன்கள் குவித்துள்ளார். லாராவை விட 12 ரன்களே பின்தங்கியுள்ளார்.

    பிரைன் லாரா கிறிஸ் கெய்ல்

    இந்நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளா். இன்றைய போட்டியில் அவர் 13 ரன்கள் அடித்தால் லாராவின் சாதனையை முறியடித்து தனது பெயரை வரலாற்றில் பதிய வைப்பார்.
    Next Story
    ×