என் மலர்

  செய்திகள்

  தமிழ் தலைவாஸ்
  X
  தமிழ் தலைவாஸ்

  புரோ கபடி ‘லீக்’: தமிழ் தலைவாஸ் 3-வது வெற்றி ஆர்வம்- உ.பி. அணியுடன் இன்று மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் இன்றைய ஆட்டத்தில் உ.பி. யோதா அணியை வீழ்த்தி 3-வது வெற்றி பெற ஆர்வமாக உள்ளது.
  புரோ கபடி ‘லீக்’ போட்டியில் பாட்னாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 29-வது ‘லீக்’ ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- உ.பி. யோதா அணிகள் மோதுகின்றன.

  சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் (39-26), அரியானா ஸ்டீலர்ஸ் (35-28) அணிகளை வீழ்த்தி இருந்தது. டெல்லி (29-30), பாட்னா பைரேட்ஸ் (23-24) அணிகளிடம் 1 புள்ளியில் தோற்றது.

  அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி உ.பி. யோதாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. உ.பி. யோதா 1 வெற்றி, 2 தோல்வி, 1 டையுடன் 8 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.

  இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் பாட்னா- அரியானா அணிகள் மோதுகின்றன. பாட்னா 3-வது வெற்றி ஆர்வத்திலும், அரியானா 2-வது வெற்றி வேட்கையிலும் உள்ளன.
  Next Story
  ×