என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரண்டு இன்னிங்சிலும் சதம்: 3-வது இடத்திற்கு முன்னேறினார் ஸ்டீவ் ஸ்மித்
Byமாலை மலர்6 Aug 2019 12:16 PM GMT (Updated: 6 Aug 2019 12:16 PM GMT)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்பவர் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவாரகத்தில் சிக்கிய விவகாரத்தால் அவர் 18 மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
அதன்பின் முதன்முறையாக இங்கிலாந்துக்குக்கு எதிராக கடந்த 1-ந்தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கிய முதல் ஆஷஸ் போட்டியில் களம் இறங்கினார். முதல் இன்னிங்சில் 144 ரன்களும், 2-வது இன்னிங்சில் 142 ரன்களும் விளாசி அசத்தினார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
இதனால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன்மூலம் ஐசிசியின் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறினார். இந்த போட்டிக்கு முன் 857 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்தார். தற்போது 900 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 913 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

Next Story
×