என் மலர்

  செய்திகள்

  பொல்லார்டு
  X
  பொல்லார்டு

  நடுவர் பேச்சை கேட்காத பொல்லார்டுக்கு 20 சதவீத அபராதம்: கூடுதலாக சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியின்போது நடுவர் பேச்சை கேட்காததால் பொல்லார்டுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்டு பீல்டிங் செய்யும்போது, தனக்குப்பதிலாக மாற்று வீரர் பீல்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நடுவரிடம் தெரிவித்தார்.

  நடுவர் ஓவர் முடிந்த பின்னர் மாற்று வீரரை அழைத்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் நடுவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து மாற்று வீரரை அழைத்துக் கொண்டிருந்தார்.

  இதனால் களநடுவர் போட்டி நடுவரிடம் புகார் அளித்தார். வீரர்களின் நன்னடத்தையை மீறியதாக பொல்லார்டுக்கு 20 சதவீதம் அபராதம் விதித்ததுடன், சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.
  Next Story
  ×