search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷுப்மான் கில்
    X
    ஷுப்மான் கில்

    துலீப் டிராபி: இந்தியா ப்ளூ அணிக்கு ஷுப்மான் கில் கேப்டன்

    இந்தியா ரெட், இந்தியா ப்ளூ, இந்தியா க்ரீன் அணிகள் மோதும் துலீப் டிராபிக்கான இந்தியா ப்ளூ அணிக்கு ஷுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரில் இளம் வீரரான ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இவரது ஆட்டத்திறன் சிறப்பாக இருந்ததால் விரைவில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் வாழ்த்தினர். தற்போது இந்திய ‘ஏ’ அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில் துலீப் டிராபி 2019 தொடருக்கான இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியா ப்ளூ, இந்தியா க்ரீன், இந்தியா ரெட் அணிகள் மோதும் துலீப் டிராபி 2019 தொடர் ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் செப்டன் 8-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்தியா ப்ளூ அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    ஷுப்மான் கில் (கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், ராஜத் பதிதார், ரிக்கி புய், அன்மோல்ப்ரீத் சிங், அங்கீத் பவ்னி, ஸ்னெல் பட்டேல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் கோபால், சவுரப் குமார், ஜலால் சக்சேனா, துஷ்கர் தேஷ்பாண்டே, பாசில் தம்பி, அனிகெட் சவுத்ரி, திவேஷ் பதியானா, அஷுடோஷ் அமர்.
    Next Story
    ×