என் மலர்

  செய்திகள்

  ஜெய்ப்பூர் வீரரை தடுக்கும் டெல்லி வீரர்கள்
  X
  ஜெய்ப்பூர் வீரரை தடுக்கும் டெல்லி வீரர்கள்

  புரோ கபடி - ஜெய்ப்பூரை வீழ்த்தி டெல்லி அணி 4வது வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாட்னாவில் நேற்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்திய டெல்லி அணி, தனது 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
  பாட்னா:

  புரோ கபடி போட்டி 7வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

  இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 35-24 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. 5-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். ஜெய்ப்பூர் அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

  மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 33-31 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை சாய்த்தது.
  Next Story
  ×