search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி வீரர்கள்
    X
    இந்திய அணி வீரர்கள்

    இந்திய அணியின் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 95 ரன்னில் சுருண்டது

    முதல் 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணியின் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    லாடர்ஹில்:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஜான் ஜம்பெல் 0, லீவிஸ் 0, புரான் 20, ஹெட்மெயர் 0, பவுல் 4, பிராத்வொயிட் 9, சுனில் நரேன் 2, பவுல் 3, வெளியேறினர். அதிகபட்சமாக பொல்லார்டு 49 ரன்கள் எடுத்தார்.

    இந்திய தரப்பில் சைனி 3, புவனேஸ்வர் குமார் 2, வாசிங்டன் சுந்தர், கலில் அகமது, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
    Next Story
    ×