என் மலர்

  செய்திகள்

  தமிழ்நாடு பிரிமீயர் லீக் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
  X
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் நத்தத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ்.
  4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் நடைபெறும் இன்றைய 2-வது ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஹிஜித் சந்திரன் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

  மதுரை பாந்தர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அருண் கார்த்திக், சரத் ராஜ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அருண் கார்த்திக் 39 ரன்கள் சேர்த்தார். சரத் ராஜ் 18 ரன்னில் ஆட்மிழந்தார்.

  கேப்டன் பிஸ் சந்த்ரன் 39 ரன்களும், விக்கெட் கீப்பர் நிலேஷ் சுப்ரமணியம் 15 பந்தில் 31 ரன்களும் சேர்க்க மதுரை பாந்தர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் பெரிய சாமி, ஹரிஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

  பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்து வருகிறது.
  Next Story
  ×