search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்.
    X
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்.

    டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5-வது வெற்றி ஆர்வம்- மதுரை அணியுடன் இன்று மோதல்

    நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஹிஜித் சந்திரன் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திண்டுக்கல்:

    4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் - சாய்கிஷோர் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திண்டுக்கல் அணி தான் மோதிய 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்று 8 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி திருச்சி வாரியர்சை வீழ்த்தி 5-வது வெற்றியுடன் மீண்டும் முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    திருச்சி வாரியர்ஸ் அணி தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை. இதனால் அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஹிஜித் சந்திரன் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன்னில் தோற்றது.

    அதைத் தொடர்ந்து நடந்த 4 ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வென்று முத்திரை பதித்தது. திருச்சி வாரியர்சை 41 ரன் வித்தியாசத்திலும், காரைக்குடி காளையை 54 ரன் வித்தியாசத்திலும், கோவை கிங்சை 9 விக்கெட் வித்தியாசத்திலும், காஞ்சி வீரன்சை 61 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஆதிக்கம் இன்றும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி மதுரை பாந்தர்சை வீழ்த்தி5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.

    பேட்டிங்கில் கோபிநாத் 179 ரன்), கங்கா ஸ்ரீதர் ராஜீ (138 ரன்), கேப்டன் கவுசிக் காந்தி (83 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் பெரியசாமி, அலெக்சாண்டர் (தலா 9 விக்கெட்), முருகன் அஸ்வின் (6 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஹரிஷ்குமார் ஆல்ரவுண்டர் வரிசையில் ஜொலிக்கிறார். அவர் 118 ரன் எடுத்துள்ளார். 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    நடப்பு சாம்பியனான மதுரை பார்ந்தர்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ்சை வீழ்த்தி 4-வது வெற்றி பெறும் வேட்கையில் உள்ளது. மதுரை அணியில் அருண் கார்த்திக் (242 ரன்), கவுசிக் (117 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் கிரண் ஆகாஷ் (8 விக்கெட்), ரகீல்ஷா (6 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    Next Story
    ×