என் மலர்

  செய்திகள்

  இந்திய கேப்டன் விராட் கோலி - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கார்லஸ் பிராத்வெய்ட்
  X
  இந்திய கேப்டன் விராட் கோலி - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கார்லஸ் பிராத்வெய்ட்

  முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று நடக்கிறது.
  லாடெர்ஹில்:

  விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நடக்கிறது. எஞ்சிய போட்டிகள் வெஸ்ட்இண்டீசில் அரங்கேறுகின்றன.

  இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாடெர்ஹில்லில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

  உலக கோப்பை போட்டியில் அரையிறுதியில் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்த பிறகு இந்திய அணி விளையாடும் முதல் போட்டி இதுவாகும். அத்துடன் கேப்டன் விராட்கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் பலவிதமாக பறந்த பிறகு அது கற்பனை என்று விராட்கோலி மறுத்த நிலையில் இருவரும் இணைந்து களம் காண இருக்கின்றனர். எனவே இந்த போட்டி தொடரை ரசிகர்கள் உன்னிப்பாக எதிர்நோக்குவார்கள்.

  இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டில் அணியில் இடம் பிடித்து இருந்த மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் திரும்பி உள்ளனர். சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீஸ் தொடரில் இந்திய ‘ஏ’ அணியில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் இருவருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் எனலாம். புதுமுக வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

  இந்திய அணியில் விராட்கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ரவீந்திர ஜடேஜா, கலீல் அகமது, குருணல் பாண்ட்யா உள்ளிட்டோரைத் தான் அணி நம்பி இருக்கிறது. மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை தான் அணிக்கு நீண்ட நாட்களாக தலைவலியாக இருந்து வருகிறது. அதனை சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

  இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா (102 சிக்சர்) 4 சிக்சர் நொறுக்கினால், சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக சிக்சர் அடித்துள்ள கிறிஸ் கெய்லின் (105 சிக்சர்கள்) சாதனையை முறியடிப்பார்.

  பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் பொல்லார்ட், மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் ஆகியோர் திரும்பி இருக்கிறார்கள். கிறிஸ் கெய்ல் இல்லாவிட்டாலும் இளமையும், அனுபவமும் கொண்ட வீரர்கள் சம கலவையில் அணியில் அங்கம் வகிக்கின்றனர்.

  இதற்கிடையே ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், கால்முட்டி பிரச்சினையில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக ஜாசன் முகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

  இந்த மைதானத்தில் இரு அணிகளும் 2016-ம் ஆண்டில் ஒருமுறை மோதி இருக்கின்றன. அந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 245 ரன்கள் குவித்தது. இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதே மைதானத்தில் இரு அணிகளும் மீண்டும் மல்லுக்கட்டுவதால் இந்த ஆட்டத்திலும் ரன் மழையை எதிர்பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை பதினொரு 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்து உள்ளன. இதில் இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் தலா 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

  இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென் 1, சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

  20 ஓவர் தொடருக்கான இரு அணிகள் வருமாறு:-

  இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), குருணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

  வெஸ்ட் இண்டீஸ்: கார்லஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), சுனில் நரின், கீமோ பால், கேரி பியர், பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ரோவ்மன் பவெல், ஜாசன் முகமது, ஒஷானே தாமஸ், அந்தோணி பிராம்பிள், ஜான் கேம்ப்பெல், ஷெல்டன் காட்ரெல், ஹெட்மயர், இவின் லீவிஸ்.
  Next Story
  ×