search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிரடியாக அரைசதம் அடித்த சிஎஸ்ஜி வீரர் ஹரிஷ் குமார்
    X
    அதிரடியாக அரைசதம் அடித்த சிஎஸ்ஜி வீரர் ஹரிஷ் குமார்

    டிஎன்பிஎல்: காஞ்சி வீரன்ஸ் அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 19 லீக் ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரிமீயர் தொடரின் 19-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் கில்லீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ராஜூ மற்றும் கோபிநாத் களமிறங்கினர். கோபிநாத் 1 ரன்னிலும், ராஜூ 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து களமிறங்கிய  கேப்டன் கௌசிக் காந்தி மற்றும் சசிதேவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். சசிதேவ் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கௌசிக் காந்தி 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய ஹரிஷ் குமார் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 6 சிக்சர்கள் உள்பட 53 ரன்கள் விளாசினார்.

    சிஎஸ்ஜி பேட்ஸ்மேன்கள்

    இதனால் சேப்பாக் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. காஞ்சி வீரன்ஸ் தரப்பில் அந்த அணியின் தாமரை கண்ணன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×