என் மலர்

  செய்திகள்

  ரவி சாஸ்திரி
  X
  ரவி சாஸ்திரி

  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 6 பேர் போட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 13-ந்தேதி நேர்காணல் நடைபெற வாய்ப்பு.
  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார். இதேபோல பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர், பந்து வீச்சுக்கு பரத் அருண், பீல்டிங்குக்கு ஸ்ரீதர் ஆகியோர் பயிற்சியாளராக உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் இவர்களது பதவிக் காலம் முடிவடைகிறது.

  இதையொட்டி பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

  தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுகிறார். அவருடன் 6 பேர் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

  ஐ.பி.எல்.லில் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் டாம் மூடி, நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன், தென் ஆப்பிரிக்க முன்னாள் தொடக்க வீரர் கேரி கிர்ஸ்டன், இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ராபின் சிங், லால்சந்த் ராஜ்பூட் ஆகியோர் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்து உள்ளனர்.

  கேரி கிர்ஸ்டன்

  இதில் கேரி கிர்ஸ்டன் ஏற்கனவே இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து 2011-ல் உலக கோப்பையை பெற்று கொடுத்து இருந்தார். கபில்தேவ், கெய்க்வாட் உள்ளிட்டோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு பயிற்சியாளரை தேர்வு செய்து வருகிறது. 13 அல்லது 14-ந்தேதி நேர்காணலை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

  கேப்டன் விராட் கோலியின் ஆதரவு ரவிசாஸ்திரிக்கு இருக்கிறது. அதை வைத்து மட்டும் தேர்வு இருக்குமா? என்பதில் உறுதியாகவில்லை. இதேபோல பந்து வீச்சாளர் பயிற்சிக்கு வெங்கடேஷ் பிரசாத்தும், பீல்டிங் பயிற்சிக்கு ஜான்டி ரோட்சும் விண்ணப்பித்து உள்ளனர்.
  Next Story
  ×