search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    எம்எஸ்கே பிரசாத்
    X
    எம்எஸ்கே பிரசாத்

    இந்திய அணியின் பலமே அவர்தான்.. -எம்.எஸ்.கே பிரசாத்

    இந்திய அணி தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத், அணியின் பலம் யார்? என்பது குறித்து பேசியுள்ளார்.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததில் இருந்தே இந்திய கிரிக்கெட்டின் அனுபவ வீரரான டோனி கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக, அவரது ஓய்வு குறித்து பலரும் பேசி வந்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் டோனி பங்கேற்க மாட்டார் எனவும், அவர் அடுத்த 2 மாதம் ராணுவத்தில் பணியாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று முதல் வரும் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் இணைந்து டோனி ரோந்து பணியில் ஈடுபடவுள்ளார். இதற்காக ராணுவ வீரர்களுடன் டோனி இணைந்தார்.

    எம்எஸ் டோனி

    இந்நிலையில் டோனி குறித்து இந்திய அணி தேர்வாளர் எம்.எஸ்கே.பிரசாத் கூறுகையில், 'குறுகிய ஓவர் போட்டிகளில் இப்போதும் டோனி சிறந்தவராகவே விளங்குகிறார். உலக கோப்பை தொடரில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாகவும், அணியின் பலமாகவும் இருந்தவர் நிச்சயம் டோனிதான்.

    தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசம் ஆகிய அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கின்றன. இதில் டோனி இருப்பாரா என கேட்கிறார்கள்.

    ஆனால், அணியின் தேவைக்கேற்ப விளையாட, ரிஷப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். அவருக்கு அதிக நம்பிக்கையை கொடுப்பதற்காக செயல்பட உள்ளோம்' என கூறினார்.



    Next Story
    ×