search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மும்பை அணி வீரரை மடக்கிய உபி வீரர்கள்
    X
    மும்பை அணி வீரரை மடக்கிய உபி வீரர்கள்

    புரோ கபடி - மும்பையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது உபி

    புரோ கபடி லீக் தொடரில் மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை 4 புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது உபி யோத்தா அணி.
    மும்பை:

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 7-வது புரோ கபடி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் யு மும்பா அணி, உபி யோத்தா அணியை எதிர்கொண்டது.

    இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் சேர்த்ததால் ஆட்டம் பல முறை சமநிலையானது. ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 27-23 என்ற புள்ளி கணக்கில் உபி யோத்தா அணியிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.

    மற்றொரு ஆட்டத்தில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் -ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பிங்க் பாந்தர்ஸ் அணி 37-21 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
    Next Story
    ×