search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் மஞ்சரேக்கர்
    X
    சஞ்சய் மஞ்சரேக்கர்

    அவரது கருத்தை ஏற்க முடியாது.. -சஞ்சய் மஞ்சரேக்கர்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கூறிய கருத்தை தன்னால் ஏற்க முடியாது என கிரிக்கெட் தொடர் வர்ணணையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.
    எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான சரண்தீப் சிங், தேவங் காந்தி, ஜத்தின் பிரன்ஜாப் தேர்வுக்குழு இந்திய அணியை தேர்வு செய்து வந்தது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியோடு வெளியேறியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாட இருக்கிறது.

    இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அப்போது வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் கலந்து கொள்ள கேப்டன் விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டார்.

    இதுகுறித்து கவாஸ்கர் ஒரு பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரையில், ‘நொண்டி வாத்து பற்றி பேசினால், அது இந்திய அணியின் தேர்வுக்குழுவுக்கு கச்சிதமாக பொருந்தும்’ என பேசியிருந்தார்.



    இந்நிலையில் கவாஸ்கரின் இந்த கருத்துக்கு முன்னாள் வீரரும், கிரிக்கெட் தொடரின் வர்ணணையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில், ‘மரியாதைக்குரிய கவாஸ்கரின் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன்.

    விராட் கோலி கேப்டனாக தொடர்ந்து நீடிப்பது தொடர்பாகவும், தேர்வுக்குழுவினர் தொடர்பாகவும் அவர் தெரிவித்த கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஏனெனில் உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் செயல்பாடு மிகவும் மோசமான ஒன்றாக இல்லை.

    நாம் 7 ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். 2 ஆட்டத்தில் மட்டுமே தோற்றோம். அதுவும் கடைசி ஆட்டத்தில் வெற்றியை நெருங்கி வந்துதான் தோல்வியை தழுவினோம். இந்திய அணியின் தேர்வாளராக ஒருவரது வெற்றியின் அளவு, உயரம் ஆகியவற்றைவிட நேர்மைதான் முக்கியமானது’ என குறிப்பிட்டுள்ளார். 
    Next Story
    ×