search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து வீரர்கள்
    X
    இங்கிலாந்து வீரர்கள்

    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை வெல்லப் போவது யார்?

    ஆஷஸ் கோப்பை முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கோப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    5 டெஸ்ட் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது.

    2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை வென்றது இல்லை. இதனால் ஆஸ்திரேலியா இந்த தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல போராடும்.

    இங்கிலாந்து அணிக்கு சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் சாதகமே. அந்த அணி சமீபத்தில் உலக கோப்பை அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது.

    இரு அணிகளும் தொடரை கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதால் ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக இருக்கும். செப்டம்பர் 16-ந் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

    இரு அணிகள் இடையே இதுவரை 70 முறை ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடை பெற்று உள்ளது. இதில் ஆஸ்திரேலியா 33 முறையும், இங்கிலாந்து 32 முறையும் கோப்பையை வென்றுள்ளன. 5 தொடர் டிரா ஆனது.

    Next Story
    ×