search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சி வீரன்ஸ் அணி வீரர்கள்
    X
    காஞ்சி வீரன்ஸ் அணி வீரர்கள்

    தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது காஞ்சி வீரன்ஸ்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 15-வது லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது.
    திருநெல்வேலி:

    தமிழ்நாடு பிரிமீயர் கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி காஞ்சி வீரன்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது.

    டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் சிவா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, காஞ்சி வீரன்ஸ் அணியின் விஷால் மற்றும் சித்தார்த் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விஷால் 2 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர், சித்தார்துடன் ஜோடி சேர்ந்து அணியின் கேப்டன் பாபா அப்ரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    சித்தார்த் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் களமிறங்கிய சதிஷ் அதிரடியாக விளையாடிய 19 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 47 ரன்கள் விளாசினார். அந்த அணியின் கேப்டன் அப்ரஜித் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் விளாச, காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. தூத்துக்குடி தரப்பில் அந்த அணியின் வெங்கடேஷ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஸ்ரீனிவாசன் 22 ரன்னிலும் கமலேஷ் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் காஞ்சி அணியின் பந்து வீச்சை ஏதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய செந்தில்நாதன் 25 ரன்களை அடித்தார்.

    இறுதியில் தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி வீழ்த்தியது.

    காஞ்சி வீரன்ஸ் தரப்பில் அந்த அணியின் கௌதம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
    Next Story
    ×